பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
தெற்கு அந்தமான் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது.
प्रविष्टि तिथि:
08 OCT 2025 4:58PM by PIB Chennai
8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் ஒரு பகுதியாக, தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பெர்ரர்கஞ்ச்-ல் பல்வேறு அங்கன்வாடி நிலையங்களில் "மழலையர் பள்ளிப் பராமரிப்பு மற்றும் கல்வி" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது.
மேலும், அங்கன்வாடி நிலையங்களில் மழலையர் பள்ளிப் பராமரிப்பு மற்றும் கற்றல் மையம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் நோக்கம், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் இடங்களை உருவாக்குவதுடன், விளையாட்டு அடிப்படையிலான செயல்பாடுகள் மற்றும் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் காட்சிகள் மூலம் ஆரம்பகாலக் கற்றலை ஊக்குவிப்பதாகும்.
***
(Release ID:2176358)
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2178841)
आगंतुक पटल : 18