புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சிறப்பு தூய்மைப் பணி
प्रविष्टि तिथि:
10 OCT 2025 1:54PM by PIB Chennai
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்களும், அரசு அலுவலகங்களில் தூய்மையை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள வேலைகளைக் குறைக்கவும் தொடங்கப்பட்ட சிறப்புப் பிரச்சாரம் 5.0-ன் ஆரம்பக்கட்டப் பணிகளை செப்டம்பர் 15 முதல் 30, 2025 வரை நடந்தன.
நிலுவையில் உள்ள கோப்புகள் கண்டறியப்பட்டதுடன், பழைய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அலுவலகத்தில் உள்ள பயனற்ற பொருட்கள் மற்றும் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டன.
இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, இந்திய சூரிய எரிசக்தி கழகம், மற்றும் தேசிய சூரிய எரிசக்தி, காற்றாலை ஆற்றல் மற்றும் உயிர்-ஆற்றல் நிறுவனங்கள் என அனைவரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆரம்பக்கட்டப் பணிகள் முடிந்த நிலையில், தற்போது அமலாக்கப் பணி தொடங்குகிறது. அக்டோபர் 2, 2025 அன்று தொடங்கிய பணிகள் அக்டோபர் 31, 2025 வரை நடக்கும். இம்முயற்சியின் மூலம், அலுவலகங்களில் தூய்மை மற்றும் சிறந்த செயல்பாட்டுக் கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
(Release ID: 2177280 )
***
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2178715)
आगंतुक पटल : 18