விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமையகத்தில் ஆவண மேலாண்மை மற்றும் தூய்மைப் பராமரிப்புக்கான சிறப்பு ஏற்பாடு

प्रविष्टि तिथि: 13 OCT 2025 4:15PM by PIB Chennai

தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதுதில்லியில் கிருஷி பவன் வளாகத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமையகத்தில், ஆவணக் காப்பகம் மற்றும் இதரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை அக்குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் எம் எல் ஜாட் ஆய்வு செய்தார்.

இந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த அவர், அந்த அலுவலகத்தின் வலுவான ஆவண மேலாண்மை முறை, திறமையான அலுவலக செயல்பாடுகளை உறுதி செய்தல், சிறந்த நிர்வாகம் மற்றும் தூய்மைப் பராமரிப்புக் குறித்த பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிலுவையில் உள்ள பணிகளைக் குறைப்பது குறித்தும், குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கும் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் திறம்பட தூய்மைப் பராமரிப்பை மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பணியாளர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

***

(Release ID: 2178472 )

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2178694) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi