ஆயுஷ்
உலக மனநல தினத்தையொட்டி இரண்டு நாள் தேசிய ஹோமியோபதி மாநாடு
Posted On:
13 OCT 2025 1:40PM by PIB Chennai
உலக மனநல தினத்தையொட்டி மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் குழுமத்தின் தேசிய மனநல ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு நாள் தேசிய ஹோமியோபதி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கோட்டயத்தில், மோசமான மற்றும் அவசரகால மனநல பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் குறித்த கருபொருளில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து துறை சாரந்த நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஹோமியோபதி மனநல மருத்துவர்கள் பங்கேற்றனர். மனநல பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மூலம் சிகிச்சை அளிப்பது மற்றும் மனநல பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த நடைமுறைகள், அது தொடர்பான புதுமை ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவக் கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் மனநல பாதிப்புகளுக்கான ஹோமியோபதி சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178395
***
SS/SV/KPG/SH
(Release ID: 2178679)
Visitor Counter : 6