புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை ஆய்வுத் துறை தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு

Posted On: 12 OCT 2025 5:41PM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (12.10.2025) புதுதில்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அலுவலகத்துக்குச் சென்று, வானிலை ஆய்வு மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இணைய புவித் தகவல் (Web-GIS) அடிப்படையிலான ஆபத்து முன்னெச்சரிக்கை அமைப்பை (டிஎஸ்எஸ் - DSS) ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முன்னறிவிப்பு அமைப்புகளை உருவாக்குவதில் இத்துறை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அமைச்சர் பாராட்டினார்.

கிராம நிலை வரை இடம் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் தனித்துவமான, மக்களை மையமாகக் கொண்ட தளமான "மௌசம்கிராம்" என்ற தளத்தையும்  டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார். இந்த அமைப்பு அடுத்த 36 மணிநேரங்களுக்கு முன்னறிவிப்புகளையும், அடுத்த ஐந்து நாட்களுக்கு மூன்று மணிநேர முன்னறிவிப்புகளையும், பத்து நாட்கள் வரை ஆறு மணிநேர முன்னறிவிப்புகளையும் வழங்குகிறது. மக்கள் அஞ்சல் குறியீடு, இருப்பிடப் பெயர், அவர்களின் மாநிலம், மாவட்டம், தொகுதி, கிராம பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுத்து வானிலை தகவல்களை அணுகலாம். அனைத்து அதிகாரப்பூர்வ இந்திய மொழிகளிலும் செயல்படும் "மௌசம்கிராம்" தளம், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு சரியான நேரத்தில் துல்லியமான வானிலை தகவல்களை வழங்குகிறது.

வானிலை ஆய்வுத் துறை அதன் முன்னறிவிப்பு, எச்சரிக்கை செயல்முறையை முழுமையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது. அதிகாரிகளுடன் கலந்துரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், "மௌசம்கிராம்" தளத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வழிமுறைகளை இணைத்து, அதை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுமாறு ஆலோசனை வழங்கினார். பேரிடர்களைத் தடுக்கவும், தயார்நிலைக்குப் போதுமான நேரத்தை வழங்கவும் உதவும் தெளிவான எச்சரிக்கைகளை மக்கள் பெறுவதை உறுதிசெய்ய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 28-வது தேசிய மின்-ஆளுகை மாநாட்டின் போது, 2025-ம் ஆண்டுக்கான மின்-ஆளுகைக்கான தேசிய விருதை வென்றதற்காக வானிலை ஆய்வுத் துறைக் குழுவை அமைச்சர் பாராட்டினார்.

முன்னதாகவானிலை ஆய்வுத் துறை புது தில்லி தலைமையக வளாகமான "மௌசம் பவனில்" ஏற்பாடு செய்த சிறப்பு தூய்மை இயக்கத்தில் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, டாக்டர் ஜிதேந்திர சிங் இந்திய வானிலை ஆய்வு மைய வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டார்.

*****

(Release ID: 2178118)

AD/PLM/SG

 


(Release ID: 2178171) Visitor Counter : 6