ரெயில்வே அமைச்சகம்
புது தில்லியில் நடைபெற்ற வேதாந்தா அரை மாரத்தானில் போதைப் பொருள் எதிர்ப்பு என்ற கருப்பொருளுடன் ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்பு
Posted On:
12 OCT 2025 4:28PM by PIB Chennai
புது தில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று (12.10.2025) நடைபெற்ற வேதாந்தா அரை மராத்தான் போட்டியில் ரயில்வே பாதுகாப்புப் படை பங்கேற்றது. இந்த மதிப்புமிக்க நிகழ்வில், 5 பெண் அதிகாரிகள் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 26 பேர் கொண்ட ஒரு குழு ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) சார்பில் பங்கேற்றது.
வடக்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை இயக்குநர் திருமதி கமல்ஜோத் பிரார் தலைமை வகித்தார். இதுபோன்ற நிகழ்வுகளில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) பங்கேற்பது, அதன் பணியாளர்களிடையே உடல் தகுதி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. வேதாந்தா அரை மாரத்தான் ஓட்டத்துக்கான ரயில்வே பாதுகாப்புப் படையின் கருப்பொருள் "போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஆர்பிஎஃப்" என்பதாகும்.
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ரயில்வே மூலம் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும் ஆர்பிஎஃப் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த கருப்பொருள் எடுத்துக் காட்டுகிறது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதன் பணியில் ஆர்பிஎஃப் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தேசிய நோக்கங்களை அடைய ஒரு சமூகப் பொறுப்புள்ள அமைப்பாகவும் ஆர்பிஎஃப் தனது பங்கை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.
******
(Release ID: 2178086)
AD/PLM/SG
(Release ID: 2178105)
Visitor Counter : 6