தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய தொலைத்தொடர்புத் துறையும் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பும் இணைந்து இளைஞர்களுக்கான ரோபோட்டிக்ஸ் சவாலை நடத்தின
Posted On:
12 OCT 2025 1:38PM by PIB Chennai
புதுமை, படைப்பாற்றல், இளைஞர்கள் தலைமையிலான தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், புது தில்லியில் உள்ள யஷோபூமி இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தில், ரோபோட்டிக்ஸ் சவால் நேற்று (11.10.2025) மாலை நிறைவடைந்தது.
சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் முன்முயற்சியின் கீழ், தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய சவால், உணவுப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி போன்றவற்றில் ரோபோட்டிக்ஸ் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்தப் போட்டியில் ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மிகவும் புதுமையான முயற்சிக்கு சிறப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
ஜூனியர் பிரிவில் பெங்களூருவின் பிளேட்டோ லேப்ஸைச் சேர்ந்த ஹேயான்ஷ் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இந்த அணி ஜூலை 2026-ல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலகளாவிய இறுதிச் சுற்றில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.
சீனியர் பிரிவில் வாரணாசியைச் சேர்ந்த தி ஆம்பிஷியஸ் அவெஞ்சர்ஸ் அணியினர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் ஜூலை 2026-ல் ஜெனீவாவில் நடைபெறும் உலகளாவிய இறுதிச் சுற்றில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். நாடு முழுவதும் 55 அணிகளைச் சேர்ந்த 271 பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்ற நிலையில் அதில் பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் தகவல்களுக்கு தொலைத்தொடர்புத் துறையின் கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பார்க்கலாம்:
எக்ஸ் சமூக ஊடகம் - https://x.com/DoT_India
இன்ஸடாகிராம்- https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ ==
முகநூல் - https://www.facebook.com/DoTIndia
யூடியூப் - https://youtube.com/@departmentoftelecom?si=DALnhYkt89U5jAaa
*****
(Release ID: 2178038)
AD/PLM/SG
(Release ID: 2178079)
Visitor Counter : 19