மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம் வேளாண் சார்ந்த துறைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
Posted On:
11 OCT 2025 4:36PM by PIB Chennai
வேளாண்மையும், அதன் சார்புடைய துறைகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம், பருப்பு வகைகளில் தற்சார்பு அடையும் இயக்கம் ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2025) புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், பிரதமர் திரு நரேந்திர மோடி ₹947 கோடி மதிப்புள்ள 16 பெரிய திட்டங்களை தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்புத் துறையில் ₹219 கோடி மதிப்புள்ள ஒரு முக்கிய திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். ₹572 கோடி மதிப்புள்ள 7 புதிய திட்டங்களுக்கும், ₹121 கோடி மதிப்புள்ள 9 மீன்வளத் துறைக்கான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் ஒருங்கிணைப்பு, புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இந்த முயற்சிகள் நாட்டை மாற்றி அமைக்கும் என்று கூறினார். 2019-ம் ஆண்டில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம் தனியாக நிறுவப்பட்டதன் மூலம், இத்துறை வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இன்றைய நிகழ்வில் பெரிய மீன்வளத் திட்டங்கள், தொடங்கி வைக்கப்படுவதாகவும் இவை இந்தியாவில் மீன் உற்பத்தித்திறன், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல், இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துதல், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளத் துறைகளை தற்சார்பு இந்தியாவின் முக்கிய தூண்களாக நிலைநிறுத்துதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம் பிரதிபலிக்கிறது என்று திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.
***
(Release ID: 2177806)
AD/PLM/RJ
(Release ID: 2177912)
Visitor Counter : 5