பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாகத்தில் புதுமைகள் குறித்து 19 நாடுகளின் பிரதிநிதிகளுடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை
Posted On:
11 OCT 2025 4:53PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனமான ஐஐபிஏ-வில் (IIPA) இந்திய தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமான ஐடிஇசி (ITEC) திட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். நிர்வாகத்தில் புதுமை, தொழில்நுட்பம் சார்ந்த பொது சேவை வழங்கல் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களை அப்போது அவர் எடுத்துரைத்தார்.
19 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களிடம் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆதார் சார்ந்த டிஜிட்டல் அடையாள அமைப்புகள், பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் போன்ற இந்தியாவின் சிறந்த நிர்வாக நடைமுறைகள், வெளிப்படைத்தன்மையையும், செயல்பாட்டு வேகத்தையும் அதிகரித்துள்ளன என்று கூறினார். இந்தியாவும் நட்பு நாடுகளும் ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் வகையில், தங்கள் சொந்த நாடுகளிலிருந்து சிறந்த நிர்வாக, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஐஇடிசி பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவில் நிர்வாகத்தில் சிறந்த செயல்திறனையும் புதுமைகளையும் நோக்கி பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். உள்கட்டமைப்புகளை திட்டமிடுதல் முதல் டிஜிட்டல் சேவை வழங்கல் வரை புதுமைகளை பிரதமர் தீவிரமாக ஆதரித்து வருகிறார் என்று அவர் மேலும் கூறினார். ஐஇடிசி போன்ற திட்டங்கள் மூலம் உலக சமூகத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
***
(Release ID: 2177810)
AD/PLM/RJ
(Release ID: 2177908)
Visitor Counter : 6