அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஆர்டிஐ நிதியத்தைச் செயல்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகளுக்கு ஏஎன்ஆர்எஃப் நிர்வாகக் குழு ஒப்புதல்

Posted On: 11 OCT 2025 6:06PM by PIB Chennai

தனியார் துறையினர் ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைகளை (Research Development and Innovation- RDI) மேம்படுத்த அவர்களை ஊக்குவிப்பதற்காக அரசால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மேம்பாட்டு, புதுமை (RDI) நிதியத்தை செயல்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF-ஏஎன்ஆர்எஃப்) நிர்வாகக் குழு இன்று ஆர்டிஐ திட்டத்திற்காக ஒரு சிறப்பு நோக்க நிதியத்தை (SPF) நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்தது. அத்துடன் இதைச் செயல்படுத்தல் தொடர்பான வழிகாட்டுதல்களும் நிர்வாக கட்டமைப்பும் அங்கீகரிக்கப்பட்டது.

நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிதியத்தின் விதிகளை ஏஎன்ஆர்எஃப் ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்புதல் வரும் மாதங்களில் இந்த முயற்சியைத் தொடங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

செயல்படுத்தல் தொடர்பான வழிகாட்டுதல்களும், சிறப்பு நிதியத்தின் விதிகளும் அறிவியல் - தொழில்நுட்பத் துறையால் பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்டன. இந்த செயல்படுத்தல் வழிகாட்டுதல்கள், குறிப்பாக சிறப்பு நிதியத்தின் விதிகள், திட்டத்தை திறமையாகவும் தடையின்றியும் செயல்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கும். இது தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்துப் புதுமை சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

***

(Release ID: 2177845)

AD/PLM/RJ


(Release ID: 2177904) Visitor Counter : 7