எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின்சார ஆணையம், 52-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
11 OCT 2025 3:04PM by PIB Chennai
மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர் தொழில்நுட்ப அமைப்பான மத்திய மின்சார ஆணையம் சிஇஏ (CEA), அதன் 52-வது நிறுவன தினத்தை இன்று (2025 அக்டோபர் 11) புது தில்லியில் கொண்டாடியது.
நாட்டில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் போதுமான தரமான நம்பகமான, தடையில்லாத மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் தொலைநோக்குப் பார்வையை நோக்கிச் செயல்படும் மத்திய மின்சார ஆணையம், இத்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் மின்சாரத் தேவைகளைத் திட்டமிடுவதிலும் நிர்வகிப்பதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.
இந்த நிகழ்வில், மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மின்சார அமைச்சகம், அதன் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், மத்திய மின்சார வாரியத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய மின் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மத்திய மின்சார ஆணையத்தின் சிறந்த பங்களிப்பை திரு பங்கஜ் அகர்வால் தமது உரையில் குறிப்பிட்டார். தேசத்திற்கு நம்பகமான, குறைந்த விலையிலான, நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக கொள்கை வகுத்தல், மின் அமைப்பு திட்டமிடல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் மத்திய மின்சார ஆணையத்தின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். 2070-ம் ஆண்டுக்குள் 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' என்ற உறுதிப்பாட்டை அடைவதை நோக்கி இந்தியா பயணிக்கும்போது, பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல், அணுசக்தி திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய மின்சார ஆணையத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மத்திய மின்சார ஆணையத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகளையும் திரு. பங்கஜ் அகர்வால் வழங்கினார். தொழில்நுட்ப விவாதங்களின் ஒரு பகுதியாக, "நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதில் அணுசக்தி: வாய்ப்புகள், சவால்கள், வழிகள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விவாத அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமர்வில் நிபுணர்கள் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய மின் துறையை புதுமை, நிலைத்தன்மை, மீள்தன்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்துவதில் இந்திய மின்சார ஆணையத்தின் நீடித்த அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.
***
(Release ID: 2177769)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2177860)
आगंतुक पटल : 28