நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதாரத்தில் வேலை உருவாக்கத்திற்கான செயல்திட்டத்தை நித்தி ஆயோக் வெளியிட்டது

Posted On: 10 OCT 2025 5:45PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதாரத்தில்  வேலை உருவாக்கத்திற்கான செயல்திட்டத்தை  நித்தி ஆயோக் இன்று வெளியிட்டது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் திரு வினித் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நித்தி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பி வி ஆர் சுப்பிரமணியம் இந்த செயல்திட்டத்தை வெளியிட்டார்.

 வேலை மற்றும் பணியாளர்களின் கண்ணோட்டத்தில் இருந்து தொழில்நுட்ப சேவைகள் துறையை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வடிவமைக்கிறது  என்பதை இந்த செயல்திட்டம்  ஆராய்கிறது. இந்தியாவின் தொழில்நுட்ப சேவைகள் துறை 2031-ம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்க வேலை இடப்பெயர்ச்சி அச்சுறுத்தலை எதிர்கொண்டாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது என்று செயல்திட்டம் கூறுகிறது. இடையூறுகளை வாய்ப்பாக மாற்ற, நித்தி ஆயோக் தேசிய  செயற்கை நுண்ணறிவு திறமை  இயக்கத்தைத் தொடங்க பரிந்துரைக்கிறது.

245 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில்  செயற்கை நுண்ணறிவின் இடையூறு ஏற்கனவே பணிகளை மறு வடிவமைத்து வருவதாக அறிக்கை கூறுகிறது.   முன்மொழியப்பட்டுள்ள இந்திய திறமை செயற்கை நுண்ணறிவு இயக்கம் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள நெருங்கிய ஒருங்கிணைப்பை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு பொருளாதாரத்தில் இந்தியாவின் எதிர்காலம் தீர்க்கமான நடவடிக்கையைச் சார்ந்துள்ளது. அரசு, தொழில் மற்றும் கல்வித்துறை முழுவதும் ஒருங்கிணைந்த தலைமையுடன், தனது பணியாளர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய  செயற்கை நுண்ணறிவை வடிவமைப்பதிலும் இந்தியாவால் முன்னணியில் இருக்க முடியும் என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177440

(Release ID: 2177440)

***

SS/BR/SH


(Release ID: 2177644) Visitor Counter : 5