ஆயுஷ்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காப்பீடு ஒருங்கிணைப்பு மற்றும் ஆயுஷ் துறை ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது
Posted On:
10 OCT 2025 4:58PM by PIB Chennai
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (ஏஐஐஏ) காப்பீடு ஒருங்கிணைப்பு மற்றும் ஆயுஷ் துறை ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் பிரதீப் குமார் பிரஜாபதி, ஆயுஷ் அமைச்சகத்தின் காப்பீட்டுத் துறை நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் பேஜோன் குமார் மிஸ்ரா ஆகியோர் ஆயுஷ் துறையில் காப்பீட்டு வசதியை முன்னேற்றுவது மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைத்து பரவலாக கிடைக்கச் செய்வது குறித்த கொள்கை முன்முயற்சிகள் குறித்து ஆழமாக விவாதித்தனர்.
சமீபத்தில், மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் , ஏஐஐஏ -வில் ஆயுஷ் காப்பீடு தொடர்பான விவகாரங்களுக்கான திட்ட மேலாண்மை பிரிவை துவக்கிவைத்தார். விவாதத்தின்போது, பேராசிரியர் பிரஜாபதி, இந்த பிரிவு பங்குதாரர்களுக்கு சரியான நேரத்திலும் வெளிப்படையான முறையிலும் சூழலை வழங்கி, காப்பீடு தொடர்பான திட்டங்களை திறம்பட செயல்படுத்த உதவும் என்று கூறினார். ஆயுஷ் காப்பீட்டுத் திட்டங்களின் தகவல்களையும் பலன்களையும் பொதுமக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக்குவதில் ஏஐஐஏ முக்கியப் பங்காற்றும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின்போது, பேராசிரியர் பிரஜாபதி அவர்கள், ஃபரிதாபாத்தில் உள்ள மானவ் ரச்னா சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா அவர்களையும் அன்புடன் வரவேற்றார். டாக்டர் ஸ்ரீவாஸ்தவாவுடனான கூட்டத்தில், ஆயுர்வேதத்தில் ஆதாரம் சார்ந்த நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி பரிமாற்ற வாய்ப்புகள் ஆராயப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பிரதீப் குமார் பிரஜாபதி, "பாரம்பரிய ஞானத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை வளர்ப்பதில் ஏஐஐஏ உறுதிபூண்டுள்ளது " என கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177394
வெளியீட்டு அடையாள எண் 2177394
***
SS/VK/SH
(Release ID: 2177635)
Visitor Counter : 5