குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் பெண்களுக்கான வாய்ப்புகள் விரிவடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: குடியரசு துணைத் தலைவர்
प्रविष्टि तिथि:
10 OCT 2025 5:33PM by PIB Chennai
பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் அக்கறைச் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருணஷ்ணன் வலியுறுத்தினார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணாதேவி, இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று குடியரசு துணைத்தலைவரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது அண்மையில் இந்த அமைச்சகம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடியரசு துணைத் தலைவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஆக்கபூர்வமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். சாக்ஷம் அங்கன்வாடி, ஊட்டச்சத்து இயக்கம், பெண் சக்தி போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் எந்தவொரு நபரையும் விட்டுவிடாமல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் திட்டங்களின் பலன்கள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் ஒருங்கிணைந்த வலுவான அணுகுமுறை அவசியம் என்று அவர் கூறினார்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு உள்ளிட்டத் துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதற்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருணஷ்ணன் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177430
***
SS/SV/SG/SH
(रिलीज़ आईडी: 2177579)
आगंतुक पटल : 27