சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச ஊதா திருவிழா 2025 கோவாவில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
10 OCT 2025 10:55AM by PIB Chennai
பன்முகத்தன்மையை கொண்டாடும் சர்வதேச உதா திருவிழாவின் 3வது பதிப்பை கோவாவில் அம்மாநில முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான கோவாவின் அர்ப்பணிப்பை டாக்டர் பிரமோத் சாவந்த் வலியுறுத்தினார். இந்த திருவிழா அதிகாரமளித்தலின் அடையாளமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "உள்ளடக்க சிந்தனையை" வலியுறுத்திய அவர், மாற்றுத் திறனாளிகளின் திறமை மற்றும் ஆற்றலை இந்த விழா வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் விரேந்திர குமார், மாற்றுத்திறனாளிகள் இனி வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்கப்படமாட்டார்கள். அவர்கள் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர், மற்றும் சமூகத்திற்கு செயலூக்கமான பங்களிப்பாளர்கள் என்றார். ‘
ஊதா திருவிழா 2025-ன் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், ஊதா திருவிழா திறமை மற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், சமூக பார்வையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது என்று கூறினார். மாற்றுத்திறனாளிகளின் திறன், பங்களிப்பு மற்றும் அவர்களின் தொழில் முனைவை அங்கீகரிப்பதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக நலத்துறை இணை அமைச்சர் திரு சுபாஷ் ஃபல் தேசாய், பேசுகையில், இது போன்ற திருவிழாக்கள் உள்ளடக்கத்தை மகிழ்ச்சியானதாகவும், அர்த்தமுள்ளதாகவும், கண்ணுக்குத் தெரியும் வகையிலும் மாற்றுகின்றன என்று கூறினார்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே, பேசுகையில், "நமது பிரதமர் உலகளவில் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் பிரபலமான தலைவர்களில் ஒருவர், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் நலனுக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்" என்று கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்களின் வளர்ந்து வரும் பங்கு குறித்து பேசினார்.
மாற்றுத்திறனாளிகளின் திறமை, தொழில்முனைவு மற்றும் பங்களிப்புகளைக் இந்த விழா கொண்டாடுகிறது, மேலும் ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடனும் வாய்ப்புடனும் செழிக்கக்கூடிய சமூகத்தை ஊக்குவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திரு குருபிரசாத் பவஸ்கர், இந்த திருவிழாவை "மாற்றுத்திறனாளிகளின் திறமை, படைப்பாற்றல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தும் தனித்துவமான தளம்" என்று விவரித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177173
***
SS/VK/KR
(रिलीज़ आईडी: 2177347)
आगंतुक पटल : 23