பாதுகாப்பு அமைச்சகம்
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமுதாயம் ஒன்றிணைய வேண்டும்- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
09 OCT 2025 2:12PM by PIB Chennai
ஆஸ்திரேலியாவில் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2025 அக்டோபர் 09 அன்று கான்பராவில் ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லெஸுடன் விரிவான இருதரப்பு பேச்சு நடத்தினார். இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையின் ஐந்து ஆண்டுகளை குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆராய்ச்சி பாதுகாப்பு தொழில்துறை ஒருங்கிணைப்பு, கடல்சார் பாதுகாப்பு ராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இருதரப்பும் ஒப்புகொண்டனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளை குறிக்கும் வலுவான வேரூன்றிய கலாச்சார உறவுகள் மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். தகவல் பகிர்வு ஒப்பந்தம், நீர்மூழ்கிக் கப்பல் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கூட்டுப்படையின் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துவதற்கான விதிமுறைகள் ஆகிய மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த திரு ராஜ்நாத் சிங், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செயல்பட முடியாது என்றும், பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக இருக்க முடியாது என்றும், நீரும் இரத்தமும் ஒன்றாகப் பாயாது என்றும் வலியுறுத்தினார். அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக சர்வதேச சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என்றும் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பானீஸ் பங்கேற்று திரு ராஜ்நாத் சிங்கை வரவேற்றார். 2025 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் தமது வாழ்த்துகளை பாதுகாப்பு அமைச்சர் திரு அல்பான்ஸுக்கு தெரிவித்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176712
***
SS/IR/AG/SH
(रिलीज़ आईडी: 2177020)
आगंतुक पटल : 31