PIB Headquarters
azadi ka amrit mahotsav

சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு அருணாச்சலப் பிரதேசத்தில் விவசாயிகள், கலைஞர்கள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு அதிகாரமளிக்கிறது

प्रविष्टि तिथि: 09 OCT 2025 12:15PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தில் முக்கிய வேளாண், தோட்டக்கலை, பதப்படுத்தப்பட்ட மற்றும் கலைப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12-18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் விலைகள் 6 முதல் 11 சதவீதம் வரை குறைந்து உற்பத்தியாளர்களின் லாபம் நேரடியாக அதிகரிக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேளாண்துறையைச் சார்ந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆரஞ்ச், கிவி, இஞ்சி போன்ற பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு உள்நாட்டிலும், உலக அளவிலும் அதன் விலையை மேலும் குறைத்து போட்டித்தன்மையை ஏற்படுத்தும். பிஸ்கெட் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் அதன் விலை 11 சதவீதமும், ஊறுகாயின் விலை 7 சதவீதமும் குறைந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அத்தியாவசிய சரக்கு மற்றும் சேவைகளின் மீதான வரிச் சுமையை குறைத்துள்ளதன் மூலம் நுகர்வோருக்கு அவை மேலும் விலை குறைவாக கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. வரிக்குறைப்பு, உற்பத்தி மற்றும் சந்தை செலவுகளை குறைத்தது மட்டுமின்றி தேவையையும் விற்பனையையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அருணாச்சலப் பிரதேச பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் வேளாண் சமூகம் நேரடியாக பயனடைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176656  

***

SS/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2177009) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Odia