சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் பழங்குடியின கலைக்கண்காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார்
Posted On:
09 OCT 2025 11:39AM by PIB Chennai
புதுதில்லியில் 2025 அக்டோபர் 09 அன்று, நான்கு நாள் தனித்துவம் மிக்க பழங்குடியின கலைக்கண்காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் நான்காவது பதிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் ஆதரவுடன் சங்கலா அறக்கட்டளை நடத்துகிறது.
இந்தக் கண்காட்சி பழங்குடி சமூகங்கள் மற்றும் காடுகளிலும் அதையொட்டிய பகுதிகளிலும் வசிக்கும் பிற வனவாசிகளின், குறிப்பாக இந்தியாவின் புலிகள் காப்பகங்களில் வசிக்கும் பிற வனவாசிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கண்காட்சி, இந்த சமூகங்களின் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தும். மேலும் புலிகள் பாதுகாப்பு, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் இயற்கைக்கும் இந்த சமூகங்களுக்கும் இடையிலான கூட்டுவாழ்வு உறவு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து நகரவாசிகள் மேலும் அறிய வாய்ப்பளிக்கும். இந்த சமூகங்களுக்கான மாற்று வாழ்வாதார வாய்ப்புகளையும் இது ஆராயும். இதன் மூலம் அவர்கள் வன வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மனித-வனவிலங்கு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும்.
இந்த ஆண்டு கண்காட்சி, புலிகள் காப்பகங்களை நடத்தும் 17 மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பழங்குடி கலைஞர்களை ஒன்றிணைக்கும்.
இந்த கண்காட்சியில் இந்தியாவின் 30-க்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்களிலிருந்து 250 ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் தொகுப்பு பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176634
***
SS/IR/AG/SH
(Release ID: 2177005)
Visitor Counter : 10