புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் அக்டோபர் 9 அன்று பெங்களூரூவில் கருத்தரங்கை நடத்துகிறது
Posted On:
08 OCT 2025 2:13PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் ஆதார அடிப்படையிலான முடிவெடுத்தல், அரசு கொள்கைகளை வடிவமைத்தல் ஆகியவற்றிற்காக நாட்டிற்கு 75 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளதை கொண்டாடுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வையொட்டி, தேசிய புள்ளியியல் அலுவலகம் பெங்களூரூவில் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் 2025 அக்டோபர் 09 அன்று “தேசிய மாதிரி கணக்கெடுப்பு அரசு கொள்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்துகிறது. அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம், இந்திய புள்ளியியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கேற்புடனும் பெங்களூரூ இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடனும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176215
***
SS/IR/AG/KR
(Release ID: 2176404)
Visitor Counter : 4