கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய தேசிய காப்பகம் 2025 அக்டோபர் 10 அன்று “நல்லாட்சி மற்றும் பதிவுகள்” என்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
08 OCT 2025 1:18PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்திய தேசிய காப்பகம் நல்லாட்சி மாதத்தை கடைபிடிப்பதன் ஒரு பகுதியாக 2025 அக்டோபர் 10 அன்று புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “நல்லாட்சி மற்றும் பதிவுகள்” என்ற தலைப்பில் கண்காட்சியை நடத்தவுள்ளது. இக்கண்காட்சியை காலை 10.00 மணியளவில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கிவைக்கிறார்.
வளமான சமூகம், பொது நடத்தை விதிமுறைகளை வடிவமைத்தல், சமூக உரையாடல், நலத்திட்டங்களை திறம்பட அமல்படுத்துதல் ஆகியவற்றிற்கு தூய்மையும், நல்லாட்சியும் ஒருங்கிணைந்தவையாகும். இது தொடர்பான முக்கிய தேசிய முன்முயற்சிகளில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தூய்மை மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி நாட்டின் ஆவண பாரம்பரியத்தின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது. 2021-25-ம் ஆண்டுகளுக்கு இடையே பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய ஆவணங்கள் மேலாண்மை நடைமுறையை மேற்கொண்டு அதை கண்டறிந்து 75,500-க்கும் அதிகமான வரலாற்று மதிப்புமிக்க ஆவணங்களை இந்திய தேசிய காப்பகத்திற்கு அனுப்பின. நல்லாட்சியின் தூண்களாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் பதிவுகளை பராமரித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், இக்கண்காட்சி இப்பதிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைக் காட்சிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176183
***
SS/IR/AG/KR
(Release ID: 2176336)
Visitor Counter : 6