PIB Headquarters
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் சைபர் மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 08 OCT 2025 12:10PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சைபர் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பில் ஒரு அங்கம் என்பதே எனது கனவாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் இணையதள பயன்பாடு நாள்தோறும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளுடன் பரபரப்பாக உள்ளது. 86 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் தற்போது இணையதள வசதியால் இணைக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வளர்ச்சியை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது.

டிஜிட்டல் தளங்களில் அனுமதியில்லாத பயன்பாடுகள், தரவு திருட்டுகள் அல்லது ஆன்லைன் முறைகேடுகள் போன்றவற்றால் ஏற்படும் நிதி இழப்புகளைத் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

2022-ம் ஆண்டில் 10.29 லட்சமாக இருந்த சைபர் மோசடி சம்பவங்கள், 2024-ம் ஆண்டில் 22.68 லட்சமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் தளப்பயன்பாட்டில் உள்ள அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அதே நேரத்தில் தேசிய சைபர் குற்ற அறிக்கைக்கான இணையதளத்தில் 36.45 லட்சம் ரூபாய் சைபர் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் ஆன்லைன் கேமிங் மசோதா 2025 நிறைவேற்றப்பட்டுள்ளது. 1,05,796 காவல் துறை அதிகாரிகள் சைபர் மோசடிகள் குறித்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அதற்கான இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.  82,704-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யவேண்டியதைக் கருத்தில் கொண்டு நாட்டின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, தகவல் தொழில்நுட்பம் (இடைக்கால வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகளுக்கான கோட்பாடுகள்) விதிகள் 2021 மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023 ஆகியவை இயற்றப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176146  

***

SS/SV/KPG/KR


(Release ID: 2176260) Visitor Counter : 11