PIB Headquarters
மசாலா முதல் கடல் உணவு வரை ஜிஎஸ்டி சீர்திருத்தம் கேரளாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது
प्रविष्टि तिथि:
08 OCT 2025 10:28AM by PIB Chennai
கேரளாவில் விவசாயம், கடல்சார் வளங்கள், பயிர் வகைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி பெருமளவில் உள்ளது. ஒவ்வொரு துறையும் ஏராளமானவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் பல்வேறு முக்கிய துறைகளில் வரி விகிதத்தைக் குறைத்துள்ளதுடன் பொருட்கள் மற்றும் சேவைகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் ஏற்றுமதியில் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்கும் வருவாய்க்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்கும் உதவிடும் வகையில் அமைந்துள்ளது.
இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள மசாலா பயிர்வகைகளைப் பயிரிடும் தோட்டங்கள், ஆழப்புழாவில் உள்ள தென்னை நார் தொழிற்சாலை, கொச்சி மற்றும் கன்னூரில் உள்ள மீன்பிடித் தொகுதிகள், கொல்லத்தில் உள்ள முந்திரி உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்கள் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்றுள்ளது. பொருட்கள் தவிர சேவைகள் துறையிலும் குறிப்பாக சுற்றுலா, ஆயுர்வேதம் மற்றும் நலவாழ்வு தொடர்பான துறைகளில், ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது அவற்றுக்கான செலவுகளை வெகுவாகக் குறைத்துள்ளது.
கொல்லத்தை மையமாகக் கொண்ட முந்திரி பதனிடும் தொழிற்சாலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முந்திரிக் கொட்டைகளைப் பிரித்தல், தோல் உரித்தல் மற்றும் தரம் பிரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் சிறிய அளவிலான குடிசைத் தொழிலாகவும், கூட்டுறவு தொழிலாகவும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்திரி மீதான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக அமைந்துள்ளது.
புவிசார் குறியீட்டுடன் கூடிய தென்னை நார் பொருட்களான பாய்கள், கயிறுகள் மற்றும் நார் இழையிலான ஜவுளிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்த 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் உள்ள 85 சதவீத தென்னை நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரிதும் உத்வேகமாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2176100
***
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2176204)
आगंतुक पटल : 31