பாதுகாப்பு அமைச்சகம்
2029-ம் ஆண்டுக்குள் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்ய இலக்கு – பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
07 OCT 2025 4:17PM by PIB Chennai
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு நாடு முழுமைக்கும் கூட்டுப் பொறுப்பு வகிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லி விஞ்ஞான் பவனில் தேசிய மாநாட்டை 2025 அக்டோபர் 7 அன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவது வெறும் ஒரு அமைப்பு அல்லது அரசின் கடமையல்ல என்றும் இது அனைத்து இந்தியர்களின் கூட்டுப் பொறுப்பு என்று கூறினார்.
நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சூழலில் உலகாளவிய போட்டித் தன்மையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதில் செயல்பாட்டு கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது வெறும் நமக்கான உற்பத்தி அல்லது பொருளாதாரம் என்ற விஷயம் மட்டுமின்றி இதில் முதன்மையான முக்கியமான உத்திசார்ந்த தன்னாட்சி மற்றும் இறையாண்மையுடன் நேரடியாக தொடர்புடைய அம்சம் என்று குறிப்பிட்டார். 2029-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதையும் இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175810
***
AD/IR/KPG/SH
(Release ID: 2176050)
Visitor Counter : 4