விவசாயத்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர் விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகளின் கௌரவ நிதியை மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் விடுவித்தார்
प्रविष्टि तिथि:
07 OCT 2025 4:46PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று விடுவித்தார். புதுதில்லியில் கிரிஷி பவனிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இத்தவணைத் தொகை விடுவிக்கப்பட்டது.
இதன் மூலம் 85,418 பெண் விவசாயிகள் உட்பட 8.55 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 171 கோடி ரூபாய் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. இத்துடன் பிரதமரின் வேளாண் திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீர் விவசாயிகள் ரூ.4,052 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், ஜம்மு காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் மக்களுடன் மத்திய அரசு தோளோடு தோளாக உறுதுணையுடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175836
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2175992)
आगंतुक पटल : 35