PIB Headquarters
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதார மேம்பாட்டுக்கும் உதவுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2025 11:44AM by PIB Chennai
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிச்சுமையை குறைப்பதுடன், தேவைகளை போட்டித் தன்மையுடன் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டும் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நோக்கமாக கொண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் தொழில் அம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அங்கமாக திகழ்கிறது. ஜவுளி, கைவினைப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் வேளாண் விளைப் பொருட்கள் அம்மாநில வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதையும், போட்டித் தன்மையை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஜவுளித் தொழிலுக்கான சூழல் அமைப்புகள் (ஆயத்த ஆடைகளுக்கான மூலப்பொருள்கள் கிடைப்பது முதல் அவற்றின் உற்பத்தி வரை) ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியும் அத்துறையின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. ஜவுளிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டித் தன்மையை ஏற்படுத்த வகைசெய்கிறது. மேலும் ஜவுளிகளுக்கான விலைகள் குறைவதுடன் அவற்றின் விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது கைவினை கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நேரடியாக பலன் அளிக்கிறது.
ஜவுளி, கைவினைப்பொருட்கள், காலணிகள், உலோகங்கள், உணவு வகைகள், பால் பொருட்கள் மற்றும் மிதிவண்டிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகைசெய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175668
***
SS/SV/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2175829)
வருகையாளர் எண்ணிக்கை : 32