புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நுகர்வோர் விலைக் குறியெண் தொகுப்பில் இலவச பொது விநியோகத் திட்டப் பொருட்களின் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் அறிக்கை 2.0 வெளியீடு
Posted On:
04 OCT 2025 2:09PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நுகர்வோர் விலைக் குறியெண்ணின் (CPI) அடிப்படைத் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறையில், விலை சேகரிப்பின் பரப்பை அதிகரித்தல், தற்போதுள்ள வழிமுறைகளைச் செம்மைப்படுத்துதல், புதிய தரவு மூலங்களை ஆராய்தல் மற்றும் விலை சேகரிப்பு மற்றும் குறியீட்டுத் தொகுப்பில் நவீன தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
மத்திய அரசால்2023 ஜனவரி 1 முதல் 75% கிராமப்புற மற்றும் 50% நகர்ப்புற மக்களை உள்ளடக்கிய இலவச உணவு தானிய விநியோகத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், சிபிஐ மற்றும் பணவீக்க அளவீட்டில் அதன் பொருத்தமான மற்றும் யதார்த்தமான பிரதிபலிப்பை உறுதி செய்யும் விஷயம் முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் மாறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தலைப்பில் 2024 நவம்பர் 20 அன்று ஒரு கருத்தாய்வு அமர்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல் விவாதக் குறிப்பு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் டிசம்பர் 2024-ல் வெளியிடப்பட்டது.
கலந்துரையாடல் அறிக்கை 2.0-ல் முன்மொழியப்பட்ட வழிமுறையானது, மேலே குறிப்பிடப்பட்ட கலந்துரையாடல்களின் போது பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை உள்வாங்கிய பிறகு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தொகுப்பு கட்டமைப்பில் இலவச பொது விநியோகத் திட்டப் (பிடிஎஸ்) பொருட்களின் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் அறிக்கை 2.0 மீது நிபுணர்கள், கல்வியாளர்கள், அரசு அமைப்புகள், மாநில அரசுகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வரவேற்கிறது.
கலந்துரையாடல் அறிக்கை 2.0, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளமான www.mospi.gov.in மற்றும் சிபிஐ கிடங்கின் www.cpi.mospi.gov.in இணையதளம் ஆகியவற்றில் கிடைக்கிறது. கருத்துகளையும் ஆலோசனைகளையும் psd-nso2020@mospi.gov.in என்ற முகவரிக்கு 2025 அக்டோபர் 22-க்குள் அனுப்பலாம்.
*****
(Release: 2174740)
AD/EA/SG
(Release ID: 2174889)
Visitor Counter : 7