தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறை தூய்மையே சேவை இயக்கம் 2025-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
04 OCT 2025 1:36PM by PIB Chennai
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் 2025-ஐ மத்திய தொலைதொடர்புத் துறை கடைப்பிடித்தது. நாடு முழுவதும் உள்ள தூய்மை இலக்கு அலகுகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தி, தூய்மை இயக்கங்களுக்கான பெரிய அளவிலான ஆதரவையும் குடிமக்களின் பங்களிப்பையும் இந்த இயக்கம் எளிதாக்கியது. இந்த இயக்கம் தொலைத்தொடர்புத்துறையின் தலைமையகம், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், களப் பிரிவுகள் மற்றும் பொதுத்துறை பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தீவிர பங்கேற்பை ஈர்த்தது.
தூய்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, நாடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்புத்துறையின் கள அலுவலகங்களில் வாக்கத்தான்கள், சுவரொட்டி தயாரிப்புப் போட்டிகள், மரம் நடுதல், தூய்மை சார்ந்த உறுதிமொழிகள், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு முகாம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தூய்மையே சேவை இயக்கத்தின் முடிவில், சிறப்பு பிரச்சாரம் 5.0 இன் செயல்படுத்தல் கட்டம் தொடங்கப்பட்டது. தொலைத்தொடர்புத்துறையின் தலைமையகத்தில் தூய்மை இயக்கம் மற்றும் நிலுவையில் உள்ள மக்கள் பிரச்சினைகள் மற்றும் தொடர்புடைய பிற விஷயங்களைத் தீர்ப்பதற்கான உறுதிமொழி ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174734
****
AD/BR/SG
(Release ID: 2174879)
Visitor Counter : 6