அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சிறப்பு இயக்கம் 5.0-ன் ஆயத்தப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 03 OCT 2025 3:12PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சிறப்பு இயக்கம் 5.0-ன் ஆயத்தப் பணிகளை  வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பு இயக்கத்தின் செயலாக்கப் பகுதி அக்டோபர் 2 முதல் 31, 2025 வரை நடைபெற உள்ளது.

ஆயத்தப் பகுதியில், நிலுவையில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் கடிதங்கள், பொதுமக்கள் குறைகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள் ஆகியவை இத்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், சுத்தப்படுத்தும் பணிகளுக்கான அலுவலகங்கள் மற்றும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய மின்னணு/ அலுவலகப் பொருட்கள் ஆகியவை மதிப்பிடப்பட்டுள்ளன. ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், தேவையற்ற கோப்புகளை அகற்றுவதன் மூலமும் அலுவலக இடங்களை தூய்மைப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தனது இலக்குகளை சிறப்பு இயக்கம் 5.0-ன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அதன் கீழ் 318 தூய்மைப் பிரசாரத் தளங்களையும், மறுஆய்வுக்காக 6628 இயல் கோப்புகளையும், 1046 மின் கோப்புகளையும், அத்துடன் 88 நிலுவையிலுள்ள பொதுக் குறைகள் மற்றும் 7 மேல்முறையீடுகளையும் அடையாளம் கண்டு இலக்குகளைப் பதிவேற்றியுள்ளது. செயலாக்கப் பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174436

 

***

AD/SE/SH


(Release ID: 2174659) Visitor Counter : 4
Read this release in: English , Urdu , Hindi