நிதி அமைச்சகம்
கோவா ஓட்டுநர் சமூகத்திற்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்; சுமார் 5000 ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியக் காப்பீடு விரிவாக்கம்
Posted On:
03 OCT 2025 1:34PM by PIB Chennai
முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு சிறப்பு முயற்சியாக, கோவாவின் ஓட்டுநர் சமூகத்திற்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு மௌவின் கோடின்ஹோ முன்னிலையில், கோவாமைல்ஸ், எச்டிஎஃப்சி ஓய்வூதிய நிதி ஆகியவற்றுடன் இணைந்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இதனை அறிமுகப்படுத்தியது. இந்த முன்முயற்சி 2025, செப்டம்பர் 30 அன்று பன்ஜிமில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது.
இந்த முன்முயற்சி கோவாமைல்ஸ் தளத்தில் இயங்கும் சுமார் 5,000 ஓட்டுநர்களுக்கு ஓய்வூதியத் திட்டமிடலுக்கான அணுகலை வழங்கும். இந்த நிகழ்வில், திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 50 ஓட்டுநர்களுக்கு நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த முன்முயற்சியைத் தொடங்கி வைத்து, கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு மௌவின் கோடின்ஹோ பேசுகையில், கோவா ஓட்டுநர் சமூகத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் கோவாமைல்ஸின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னோடித் திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத் தலைவர் திரு எஸ். ராமன், பாதுகாப்பான ஓய்வூதியத்திற்கு முன்கூட்டியே தொடங்குவதும் நிதி ஒழுக்கத்தைப் பேணுவதும் மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174407
**
AD/SMB/SG
(Release ID: 2174510)
Visitor Counter : 5