சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை சிறப்பு இயக்கம் 5.0-ன் முக்கிய கட்டத்திற்கு சுரங்க அமைச்சகம் தயாராகியுள்ளது

Posted On: 03 OCT 2025 11:46AM by PIB Chennai

2025 செப்டம்பர் 15 முதல் 30 வரை நடத்தப்பட்ட சிறப்பு இயக்கம் 5.0-ன் ஆயத்த கட்டத்தில் சுரங்க அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டது.

இந்தக் கட்டத்தில், சுரங்க அமைச்சகம் தூய்மை இயக்கங்களுக்காக 292 இடங்களை அடையாளம் கண்டுள்ளது. பதிவேடு மேலாண்மையில், 18,873 நேரடி கோப்புகள் மற்றும் 12,202 மின்-கோப்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஊழியர்களுக்கு பதிவேடு மேலாண்மை குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2025, அக்டோபர் 3 அன்று, சுரங்க அமைச்சக  செயலாளர் அனைத்துப் பிரிவுகளையும் சாஸ்திரி பவனில் உள்ள பதிவேடு அறையையும் நேரில் ஆய்வு செய்தார். இந்த முக்கிய கட்டத்தின் போது இலக்குகளை அடைவதற்கு சுரங்க அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, பல்வேறு அலுவலகங்களில் மின்-கழிவு சேகரிப்பு மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் முன்பதிவு மூலம் வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. புது தில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் ஒரு மின்னணு கழிவு சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது, இது 2025 அக்டோபர் 31 வரை செயல்படும்.

******

(Release ID: 2174353)

AD/SMB/SG

 


(Release ID: 2174409) Visitor Counter : 6
Read this release in: English , Urdu , Hindi , Punjabi