அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
01 OCT 2025 3:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் மற்றும் எஸ்பிவி இந்தியா கூட்டமைப்பு 2025-26 முதல் 2030-31 வரை, கூடுதலாக அடுத்த ஆண்டுகள் வரையிலும், (2031-32 முதல் 2037-38 வரை) அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதற்காக, மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.
திறன்கள் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளுடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், அதிநவீன உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான உயர்மட்ட அறிவியல் திறமைகளை மேம்படுத்துவதுடன், மொழிபெயர்ப்பு கண்டுபிடிப்புகளுக்கான இடைநிலை ஆராய்ச்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இது உயர்தர ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்தும். மேலும் அறிவியல் திறனில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, உலகத் தரம் வாய்ந்த உயிரி மருத்துவ ஆராய்ச்சி திறனை உருவாக்க உதவிடும்.
உயிரி தொழில்நுட்பத் துறை, வெல்கம் டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து 2008-2009 ஆம் ஆண்டில், உயிரி மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், உலகத் தரத்தில் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உயர் படிப்புகளை வழங்குகிறது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டம் 2018 / 19 - ம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்ட பாடத் திட்டங்களுடன் செயல்படுத்தப்பட்டது.
மூன்றாம் கட்டத்தில், பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ளன:
i) அடிப்படை, மருத்துவ மற்றும் பொது சுகாதாரத்தில் தொடக்ககால, தொழில் மற்றும் இடைநிலை ஆராய்ச்சி படிப்புகள். இவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ii) கூட்டு மானியத் திட்டம். இதில் இந்தியாவில் வலுவான ஆராய்ச்சிப் பதிவுகளைக் கொண்ட தொடக்க மற்றும் நடுத்தர மூத்த தொழில் ஆராய்ச்சியாளர்களுக்கான 2-3 புலனாய்வாளர் குழுக்களுக்களின் தொழில் மேம்பாட்டு மானியங்கள் மற்றும் வினையூக்கி கூட்டு மானியங்கள் அடங்கும்.
iii) முக்கிய ஆராய்ச்சி முயற்சிகளை வலுப்படுத்த ஆராய்ச்சி மேலாண்மைத் திட்டம். மூன்றாம் கட்ட திட்டம், வழிகாட்டுதல், நெட்வொர்க்கிங், பொது ஈடுபாடு,புதுமையான தேசிய மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173564
(Release ID: 2173564)
******
SS/SV/SH
(Release ID: 2173934)
Visitor Counter : 3