நிதி அமைச்சகம்
மத்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்திர ஆய்வறிக்கை வெளியீடு
Posted On:
30 SEP 2025 4:40PM by PIB Chennai
மத்திய அரசின் கணக்குகள் குறித்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வறிக்கை வெயிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
மத்திய அரசு வரி வருவாயாக 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 12 லட்சத்து 82 ஆயிரத்து 709 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இது 2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் வருவாய் மதிப்பீட்டில் 36.7 சதவீதமாகும். இதில் வரி வருவாயாக 8 லட்சத்து 10 ஆயிரத்து 407 கோடி ரூபாயும், வரி அல்லாத வருவாயாக 4 லட்சத்து 40 ஆயிரத்து 332 கோடியும், கடன் அல்லாத மூலதன வருவாயாக 31 ஆயிரத்து 970 கோடி ரூபாயும் அடங்கும். இந்த வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்மான தொகையாக 5 லட்சத்து 30 ஆயிரத்து 148 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 74 ஆயிரத்து 431 கோடி ரூபாய் கூடுதலாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினத் தொகை 18 லட்சத்து 80 ஆயிரத்து 862 கோடி ரூபாயாகும். இது 2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜட் மதிப்பீட்டில் 37.1 சதவீதமாகும். மொத்த செலவினத் தொகையில் 14 லட்சத்து 49 ஆயிரத்து 283 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலிருந்தும், 4 லட்சத்து 31 ஆயிரத்து 579 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலிருந்தும் செலவிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் இன செலவினங்களில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 668 கோடி ரூபாய் கடனுக்கான வட்டி தொகையாகவும், மானியமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 377 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
***
(Release ID: 2173166)
SS/SV/SH
(Release ID: 2173336)
Visitor Counter : 3