நிலக்கரி அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 5.0-வின் கீழ் நிலக்கரி அமைச்சகம் விரிவான இலக்குகளை நிர்ணயித்துள்ளது
Posted On:
30 SEP 2025 2:08PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 5.0-வின் கீழ் இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அனைத்து நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து விரிவான இலக்குகளை நிலக்கரி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. தூய்மைப்பணி, கோப்பு மேலாண்மை, குறைதீர்ப்பு, நாடாளுமன்ற உறுதிமொழி, மற்றும் தமது அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறையை எளிமையாக்குதல் ஆகியவற்றுக்கான தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தூய்மை இயக்கத்தின் போது அனைத்து நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் உள்ள 1439 இடங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத பொருட்களை கண்டறிந்து அதனை அகற்றி வருவாய் ஈட்டுவதுடன், அலுவலக இடத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும் அமைச்சகம் முன்னுரிமை அளிக்கிறது.
1,23,830 நேரடி கோப்புகளும், 32,182 மின்னணு கோப்புகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2173061
***
SS/IR/AG/SH
(Release ID: 2173270)
Visitor Counter : 5