வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்த டிஜிஎஃப்டி-யின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Posted On:
29 SEP 2025 6:05PM by PIB Chennai
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி பிராந்திய ஆணையத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT), சமீபத்தில் முடிவடைந்த இந்திய-இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடத்தியது.
“வளர்ச்சிக்கான நுழைவாயில்: இந்திய-இங்கிலாந்து சிஇடிஏ-வின் கீழ் வாய்ப்புகளைப் பயன்படுத்துதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மூத்த அரசு அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள் (EPCs), தொழில்துறை தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களை ஒன்றிணைத்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான ஒப்பந்தத்தின் மாற்றத்தக்க திறன் குறித்து ஆலோசித்தது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளருமான திரு அஜய் பாதூ, இங்கிலாந்து சந்தையில் இந்தியாவின் தடத்தை விரிவுபடுத்துவதில் சிஇடிஏ-வின் உத்திசார் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். கட்டணச் சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட சந்தை அணுகல் விதிகள் மற்றும் இந்திய எம்எஸ்எம்இகள் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் மேலும் வலுவாக ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.
வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் திரு சாகேத் குமார், பேச்சுவார்த்தைகளின் பின்னணி மற்றும் உத்திசார் சூழலை விளக்கி, இந்திய தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் தெற்காசியாவிற்கான துணை வர்த்தக ஆணையர் திருமதி அன்னா ஷாட்போல்ட், இந்த ஒப்பந்தத்தை "இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு மைல்கல்" என்று விவரித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172802
***
SS/RB/RJ
(Release ID: 2172956)
Visitor Counter : 9