வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகத்துறை அதிகாரிகளுக்கான சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தை கற்றல் திட்டம் தொடக்கம்
Posted On:
29 SEP 2025 5:36PM by PIB Chennai
வர்த்தகத்துறை அதிகாரிகளுக்கான சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தை திட்டத்தை இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் இன்று தொடங்கியது. இந்தியாவில் உலகளாவிய வர்த்தக பேச்சுகளை வலுப்படுத்தவும், அரசு அதிகாரிகளின் பேச்சுத் திறன்களை வலுப்படுத்தவும் சர்வதேச பேச்சுக்களுக்கான இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவன மையம் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நிறுவனங்களின் திறன் மேம்பாட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நிபுணர்கள் தங்களுடைய துறைகளில் உள்ள முக்கிய தலைப்புகள் குறித்து எடுத்துரைப்பதை இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் பேச்சுகளில் இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் எப்பொழுதும் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், இந்த தனித்துவம் மிக்க கற்றல் அனுபவ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் வாழ்த்துவதாகவும் அவர் கூறினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172782
SS/IR/LDN/SH
(Release ID: 2172863)
Visitor Counter : 11