PIB Headquarters
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள்: அசாம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அளிக்கும் உத்வேகம்
Posted On:
29 SEP 2025 1:41PM by PIB Chennai
அண்மையில் மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் அசாம் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள், பாரம்பரிய பட்டு உற்பத்தி, கைவினைப் பொருட்கள் உற்பத்தி, பல்லுயிர் பெருக்க நடவடிக்கைகள் ஆகியவை அம்மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் மூலப்பொருட்களுக்கான செலவுகளை குறைப்பதுடன் விற்பனை விலையில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தேவையை அதிகரிப்பதற்கும் உதவிடும்.
முக்கிய அம்சங்கள்
தேயிலைக்கான ஜிஎஸ்டி விகிதம் 5%மாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 11 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தேயிலை விற்பனை விலை குறைந்து போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
கைத்தறிக்கான ஜிஎஸ்டி விகிதம் 5%மாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் 12.46 லட்சம் நெசவாளர்களின் கைத்தறித் தொழில் வலுவடைவதுடன் 12.83 லட்சம் கைத்தறி தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பயனளிப்பதாக அமையும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 6.25 சதவீதம் சேமிப்பு கிடைக்கும்.
தங்கும் விடுதிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5%மாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவற்றுக்கான செலவுகள் வெகுவாக குறைவதால் சுற்றுலாத்துறை உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7,500 ரூபாய்க்கும் குறைவான வாடகை கொண்ட தங்கும் விடுதிகள் 5 சதவீத வரி அடுக்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம் இத்துறையில் 6.51 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
புவிசார் குறியீடு கொண்ட வேளாண் பொருட்களான ஜோஹா அரிசி மற்றும் போகா சவுல் அரிசி, காஜி நேமு தேஷ்பூர் லிச்சி போன்ற அம்மாநிலத்தின் தயாரிப்புகளுக்கு 6 முதல் 11 சதவீதம் வரை சேமிப்புக் கிடைக்கும். இது வேளாண் வருவாயை அதிகரிப்பதுடன் வேளாண் பொருட்களுக்கான தேவையையும் அதிகரிக்க வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172651
***
SS/SV/KPG/SH
(Release ID: 2172852)
Visitor Counter : 6