மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பில் எதிர்காலத்திற்கு தேவையான மேம்பட்ட தொழில்நுடப்ங்களின் தயார் நிலை
प्रविष्टि तिथि:
29 SEP 2025 10:21AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இம்மாதம் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்ற உலக உணவு இந்தியா -2025 கண்காட்சியில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை பங்கேற்றது. கால்நடை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு அத்துறைக்கான மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாஹெல் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது. இத்துறை சார்பில் இந்தக் கண்காட்சியில் 15 புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களுக்கான பயன்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பங்கேற்ற புத்தொழில் நிறுவனங்கள் வழங்கிய நேரடி விளக்கங்கள் பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும், பிரத்யேகமாக வடிமைக்கப்பட்டுள்ள சுய புகைப்பட இடத்தில் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தக் கண்காட்சியில் மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள், புதிய முன்முயற்சிகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இது கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையில் நீடித்த வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172543
***
SS/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2172741)
आगंतुक पटल : 27