தேர்தல் ஆணையம்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல், சில மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்கான மத்திய பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கவுள்ளது
प्रविष्टि तिथि:
28 SEP 2025 2:15PM by PIB Chennai
அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ், ஒரு தொகுதியில் தேர்தல் நடத்துவதைக் கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பார்வையாளர்களைப் பணியமர்த்துகிறது.
நியமனத்திலிருந்து தேர்தல் செயல்முறை முடியும் வரை ஆணையத்தின் மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தின் கீழ் பார்வையாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
தேர்தல்களின் நியாயத்தன்மை, பாரபட்சமற்ற தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் புனிதமான பொறுப்பு பார்வையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இது இறுதியில் நமது ஜனநாயக அரசியலின் அடித்தளமாக அமைகிறது. அவர்கள் ஆணையத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகிறார்கள். அவ்வப்போது மற்றும் தேவை அடிப்படையில் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியான கடமையான சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்துவதற்கு பார்வையாளர்கள் உதவுவது மட்டுமல்லாமல், தேர்தல்களில் வாக்காளர் விழிப்புணர்வையும் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கின்றனர்.
மேம்பாடுகளுக்கான பகுதிகளைக் கண்டறிந்து, உறுதியான மற்றும் செயல்பாட்டு பரிந்துரைகளை உருவாக்குவதே பார்வையாளர்களின் முக்கிய நோக்கமாகும்.
நிர்வாக சேவைகளில், நீண்ட அனுபவத்தின் அடிப்படையில், பொது மற்றும் காவல்துறை பார்வையாளர்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் ஆணையத்திற்கு உதவுகிறார்கள். கள மட்டத்தில் தேர்தல் செயல்முறையின் திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தையும் அவர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.
வேட்பாளர்களால் ஏற்படும் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க செலவு பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
****
Release ID:( 2172416)
SS/PKV/SG
(रिलीज़ आईडी: 2172465)
आगंतुक पटल : 29