பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
தொலைதூர பழங்குடி பள்ளத்தாக்கில் முதல் சுகாதார மையம் திறப்பு
Posted On:
28 SEP 2025 1:28PM by PIB Chennai
அரசு சேவைகளை கடைசி மைல் வரை வழங்குவதை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, புதுதில்லியில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்தின் உதவி ஆணையர் டாக்டர் ரஷ்மி சவுத்ரி, சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தொலைதூர பாதல்கோட் பள்ளத்தாக்கிற்கு விஜயம் செய்து, பழங்குடி சமூகங்களுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு மையத்தைத் திறந்து வைத்தார்.
தாமியா தொகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கு, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் என வகைப்படுத்தப்பட்ட கோண்ட் மற்றும் பரியா பழங்குடியினரின் தாயகமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. பல தசாப்தங்களாக, கிட்டத்தட்ட 4,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட அதன் 12 கிராமங்கள் அடிப்படை வசதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் கிராமவாசிகள் செங்குத்தான பாதைகளில் சுகாதாரப் பராமரிப்புக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அங்குள்ள மக்களின் நலனை உத்தேசித்து, சுகாதார மையம் செப்டம்பர் 27 அன்று,பொது பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
பாதல்கோட்டுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முதல் முறையாக, நமது மக்கள் அடிப்படை மருத்துவத் தேவைகளுக்காக பல மைல்கள் நடக்க வேண்டியதில்லை என்று சிந்தோலியைச் சேர்ந்த ஒரு கிராமவாசி கூறினார்.
******
Release ID:( 2172396)
SS/PKV/SG
(Release ID: 2172463)
Visitor Counter : 5