பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலன்’ குறித்த தேசிய மாநாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 27 SEP 2025 3:55PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலன் குறித்த தேசிய மாநாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வரும் 29-ந்தேதி தொடங்கி வைக்கிறார். பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை  ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டில், இந்தியாவின் முன்னாள் வீரர்களின் நல்வாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்புக்கான நாடு தழுவிய முயற்சிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்புத்துறை செயலாளர்  டாக்டர் நிதேன் சந்திராவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்.

நாடு முழுவதும், நலத்திட்டங்கள்ஒவ்வொரு முன்னாள் படைவீரரையும் அதிக செயல்திறன் மற்றும் தாக்கத்துடன் சென்றடைவதை உறுதி செய்வதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னாள் படைவீரர் நலனில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக சிறப்புமிக்க நபர்கள் மற்றும் சிறப்பாகச் செயல்படும் பிராந்திய அமைப்புகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டுவார். இந்த அங்கீகாரம் அவர்களின் அர்ப்பணிப்பை கௌரவிப்பதுடன், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இந்தியாவின் படைவீரர்களின்  ஒருங்கிணைந்த பங்கைக் கௌரவிக்கும் வகையில் அமையும் என்றும்இது  மற்றவர்களை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2172131)

SS/PKV/RJ


(Release ID: 2172284) Visitor Counter : 8
Read this release in: English , Urdu , Hindi