சுற்றுலா அமைச்சகம்
மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
27 SEP 2025 12:55PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் உலக சுற்றுலா தினம் "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. இதில், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி மற்றும் நித்தி ஆயோக் துணைத் தலைவர் திரு சுமன் பெரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ நோக்கிய இந்தியாவின் பயணத்தில், சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாக சுற்றுலா உள்ளது என்று திரு சுமன் பெரி குறிப்பிட்டார். ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 போன்ற திட்டங்கள் மூலம் இந்தியா நிலையான சுற்றுலாவை ஊக்குவிப்பதாக மத்திய இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி கூறினார்.
இவ்விழாவில், இந்தியச் சுற்றுலாத் தலங்களை திரைப்படங்கள் மூலம் உலகளவில் விளம்பரப்படுத்த நெட்ஃபிக்ஸ் நிறுவனத்துடனும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை வலுப்படுத்த அதிதி ஃபவுண்டேஷன் மற்றும் முன்னணி ஆன்லைன் பயண முகவர்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மேலும், நாட்டின் 66-வது இந்திய சுற்றுலா தரவுத் தொகுப்பு வெளியிடப்பட்டது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா உலகளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுலாத் திட்டங்களைக் கண்காணிக்க டிஜிட்டல் தளம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முத்ரா கடன் வழிகாட்டி கையேடும் வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172092
***
SS/EA/RJ
(Release ID: 2172282)
Visitor Counter : 6