ஆயுஷ்
கோவாவில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு மையத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது
Posted On:
27 SEP 2025 4:49PM by PIB Chennai
10-வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு கோவாவின் தர்கலில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில், ஒருங்கிணைந்த புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு மையத்தை, ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன நிறுவனம் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த புற்றுநோயியல் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜு, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், ஆயுஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஆயுர்வேதம், யோகா, பிசியோதெரப்பி, டயட் தெரபி, பஞ்சகர்மா மற்றும் நவீன புற்றுநோயியல் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் பல்துறை மையங்களில் இது ஒன்றாகும். இது விரிவான மறுவாழ்வு சேவைகள் மூலம் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, நோயாளியை மையமாகக் கொண்ட முழுமையான பராமரிப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172153
***
SS/PKV/RJ
(Release ID: 2172279)
Visitor Counter : 6