நிலக்கரி அமைச்சகம்
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற கருப்பொருளின் கீழ் மத்திய நிலக்கரி அமைச்சகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
Posted On:
27 SEP 2025 3:49PM by PIB Chennai
'தூய்மையே சேவை 2025' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, மத்திய நிலக்கரி அமைச்சகம் இன்று 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' என்ற கருப்பொருளின் கீழ் சராய் காலே கான், இந்திரபிரஸ்தா பூங்காவில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. தாய்மையையும் இயற்கையையும் போற்றும் வகையில் நமது அன்னையருக்கு மரங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பால் ஈர்க்கப்பட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றில் அமைச்சகத்தின் ஆழமான அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
இந்நிகழ்வில் நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரூபிந்தர் பிரார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டார். அவருடன் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் காசி மற்றும் நிதி ஆலோசகர் திரு ஆஷிம் குமார் மோடி, துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் சேத்னா சுக்லா மற்றும் அமைச்சகத்தின் பிற அதிகாரிகளும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172127
***
SS/ EA/RJ
(Release ID: 2172276)
Visitor Counter : 6