நிதி அமைச்சகம்
நான்காவது கௌடில்யா பொருளாதார மாநாட்டை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அக்டோபர் 3 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்
Posted On:
27 SEP 2025 1:34PM by PIB Chennai
கௌடில்யா பொருளாதார மாநாட்டின் நான்காவது பதிப்பை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அக்டோபர் 3 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அக்டோபர் 5 அன்று மாநாட்டை முடித்து வைப்பார்.
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெறும்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையில், உலகப் பொருளாதார நிலை, நிதி நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்களை ஆய்வு செய்யும் அமர்வு நடைபெறும்.
நெருக்கடியான காலங்களில் முன்னேற்றத்தைத் தேடுதல் என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172102
***
SS/PKV/RJ
(Release ID: 2172226)
Visitor Counter : 12