அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்நுட்ப இறையாண்மை புவிசார் அரசியல் இறையாண்மையை உறுதி செய்யும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 26 SEP 2025 1:42PM by PIB Chennai

தொழில்நுட்ப இறையாண்மை புவிசார் அரசியல் இறையாண்மையை உறுதி செய்யும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) துணைத் தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங்
தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற சிஎஸ்ஐஆர் 84-வது அமைப்பு தின விழாவில் உரையாற்றிய அவர், இந்த நிறுவனத்தின் பாரம்பரியம், அறிவியல் சாதனைகள், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ நோக்கிய நாட்டின் எதிர்காலப் பாதையை வடிவமைப்பதில் அதன் பொறுப்புணர்வு ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

உலக அளவில் போட்டித்தன்மையை தக்கவைத்துக் கொள்ள வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தனது பலத்தை கட்டமைக்க இந்தியா தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள 37 ஆய்வகங்களில், சுகாதார பராமரிப்பு, மருந்துப் பொருள்கள், வேளாண்மை, பாதுகாப்பு உபகரணங்கள், உட்பட பல்வேறு துறைகளில் சிஎஸ்ஐஆர் பணிபுரிந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2042-ல் நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியுள்ள சிஎஸ்ஐஆர் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக இருப்பதற்கான லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இந்த விழாவில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூத், அரிசோனா மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2171638 )

SS/SMB/SG/SH

 


(Release ID: 2172009) Visitor Counter : 6
Read this release in: English , Hindi