சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நாடு தழுவிய தன்னார்வ தூய்மை சேவை இயக்கம்
प्रविष्टि तिथि:
26 SEP 2025 1:40PM by PIB Chennai
தூய்மையே சேவை 2025 - தூய்மைத் திருவிழா இயக்கத்தின் கீழ் ஜெய்சால்மர் இல்லத்தில் 2025 செப்டம்பர் 25 அன்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் தன்னார்வ சேவை மேற்கொள்ளப்பட்டது.
பணியிடத்தில் தூய்மை, கட்டுப்பாடு, துப்புரவு என்ற கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்று சேர்ந்து என்ற இயக்கத்திற்கு நீதித்துறையின் செயலாளர் தலைமை வகித்தார். இந்த சேவை நீடித்த சுற்றுச்சூழல், அனைவருக்கும் நல்வாழ்வு என்பதில் கவனம் செலுத்தியது.
நமது அன்றாட வாழ்க்கையில் கழிவுப் பொருட்களை குறைப்பது, மீண்டும் பயன்படுத்துவது, மறு சுழற்சி செய்வது என்ற 3 கொள்கைகளை செயல்படுத்துவதன் அவசியம் குறித்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கத்தின் துணை இயக்குநர் டாக்டர் ராதா கோயல் தெரிவித்தார்.
தூய்மையான பசுமைத் திருவிழா திட்டத்தின் கீழ் ஜெய்சால்மர் இல்லத்தின் முகப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
***
(Release ID: 2171636 )
SS/SMB/SG/SH
(रिलीज़ आईडी: 2172005)
आगंतुक पटल : 19