சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் பி எல் வர்மா தலைமையில் “ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்று சேர்ந்து” சிறப்புத் தூய்மை இயக்கம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2025 12:30PM by PIB Chennai

தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக மகளிர் உதவிக் குழு வளாகத்தில் 2025 செப்டம்பர் 25 அன்று
“ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்று சேர்ந்து” சிறப்புத் தூய்மை இயக்கம் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா தலைமையில் நடைபெற்றது. இத்துறையின் செயலாளர் திரு அமித் யாதவ், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தத் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர். தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் 2025 செப்டம்பர் 17 முதல் 2025 செப்டம்பர் 25 வரையிலான காலத்தில் இந்த வளாகத்தில் இருந்து நான்கு ட்ரக் குப்பைகள் அகற்றப்பட்டன.

மத்திய அமைச்சரும் இத்துறையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த இயக்கத்திற்குப் பின் பொதுமக்கள் சேவைகளுக்காக மகளிர் உதவிக் குழு வளாகத்தின் தூய்மை, மேம்பாடு, தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய இணையமைச்சர் அறிவுறுத்தினார்.

***

(Release ID: 2171593 )

SS/SMB/SG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2171985) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी