ஆயுஷ்
பிரயாஸ் - முதல் ஒருங்கிணைந்த நரம்பியல் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது.
प्रविष्टि तिथि:
26 SEP 2025 12:19PM by PIB Chennai
கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பிரயாஸ் என்ற முதல் ஒருங்கிணைந்த நரம்பியல் மறுவாழ்வு மையம் செப்டம்பர் 26, 2025 அன்று திறக்கப்பட்டுள்ளது. பத்தாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் (தனிப் பொறுப்பு) மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இதை திறந்து வைத்தார். ஆயுர்வேதம், யோகா மற்றும் நவீன சிகிச்சைகள் போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து, குறிப்பாகக் குழந்தைகளுக்கான நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு முழுமையான சிகிச்சையளிப்பதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் பேசுகையில், பிரயாஸ் ஒரு முன்மாதிரியான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையமாகச் செயல்பட்டு, நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய நம்பிக்கையையும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரத்தையும் வழங்கும், என தெரிவித்தார். மேலும், இந்த மையமானது ஆயுர்வேதம், பிசியோதெரப்பி, யோகா மற்றும் தொழில் சிகிச்சை மற்றும் நவீன குழந்தை மருத்துவம் ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்கி ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்புக் குறித்த தொலைநோக்குப் பார்வையை மேலும் பலப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171587
***
(Release no: 2171587)
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2171983)
आगंतुक पटल : 29