நித்தி ஆயோக்
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை மேம்படுத்துவது குறித்த விவாதம் – நித்தி ஆயோக்
Posted On:
26 SEP 2025 10:32AM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தேசிய அளவிலான முன்னெடுப்புகள், சீர்திருத்த நடவடிக்கைகள், மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வழிகாட்டுதல்கள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கும் வகையில் நித்தி ஆயோக் மகாராஷ்டிர மாநில அரசுடன் இணைந்து நடத்திய இரண்டாவது பிராந்திய ஆலோசனைக் கூட்டம் புனேயில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் மேற்கு மற்றும் தென்பகுதியைச் சேர்ந்த 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், பரஸ்பரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே தாங்கள் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளில் செயல்பாட்டு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்தப் பிராந்திய அளவிலான கூட்டத்தில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சிக்கான பன்முகத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்தும் நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்குப் பார்வை, சான்றுகள் அடிப்படையிலான கொள்கைகளை வகுத்தல், எதிர்கால நிர்வாகத்திற்கான தயார் நிலை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171552
----
SS/SV/KPG/SH
(Release ID: 2171932)
Visitor Counter : 4