ஜல்சக்தி அமைச்சகம்
நதிகள் மாசடையாமல் பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் பொறுப்பாகும் – மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல்
प्रविष्टि तिथि:
26 SEP 2025 1:20PM by PIB Chennai
நாட்டில் உள்ள நதிகள் மாசடையாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் உள்ள கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையத்தில் நதிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கை இன்று அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பண்பாட்டின் சின்னமாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் வாழ்வாதார சூழலுக்கும் முக்கியப் பங்கு வகிக்கும் நதிகள் நமது நாட்டில் கொண்டாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். துறை சார்ந்த நிபுணர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை செயல்பாட்டாளர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்துள்ளது உற்சாகமளிப்பதாக உள்ளது என்று கூறினார்.
எதிர்கால தலைமுறையினருக்காக நதிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நதிகளுக்கான நிலமாகத் திகழும் இந்தியாவில் உலக அளவில் மிகப் புனிதத்துவம் வாய்ந்த நதியாக கங்கா நதி உள்ளது என்று அவர் கூறினார். நதிகளைப் பாதுகாப்பதில் குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே திரையிடப்படத் திருவிழாவில் தொடக்க நாளன்று திரையிடப்பட்ட எனது நதிகளின் கதை என்ற ஆவணப் படம், மற்றும் இதனுடன் கோட்டக்ஹார்ஸ் – மறைந்து போகும் நதிக்கரையோர சமூகங்கள், இந்தியாவின் நதி மனிதன், கங்கா ஆரத்தி, யமுனை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், காவிரி – வாழ்வாதாரத்திற்கான நதி போன்ற இதர ஆவணப் படங்களும் திரையிடப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171629
----
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2171873)
आगंतुक पटल : 27